புரட்டாசி மாதம் எதிரொலி - குண்டடம் சந்தையில் இறைச்சிகள் விலை விழ்ச்சி

பூரட்டாசி மாதம் என்பதால் குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, கோழியின் விலைகள் குறைந்து போனது. புரட்டாசி மாதம் முடியும் வரை விற்பனை குறைந்து காணப்படும் என வணிகர்கள் கூறினர்.


திருப்பூர்: பூரட்டாசி மாதம் எனபதால் குண்ட்டம் இறைச்சி சந்தையில் விற்பனை மந்தமாக நடந்தது.

குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறிஆடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அவற்றை வாங்குவதற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வருகிறார்கள்.

இந்த சந்தையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக ஆடு, கோழிகள் விற்பனையானது.

ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர்.

இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

கடந்த வாரம்10கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 5ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இந்த வாரம் 10 கிேலா ஆடு ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனையானது.

அதேபோல் கோழி கடந்த வாரம் 1 கிலோ ரூ. 350 வரை விற்பனையானது. இந்தவாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, வழக்கமாக புரட்டாசி சீசனில் ஆடுகள் மற்றும் கோழிகளின் விலை குறைவாகத்தான் இருக்கும்.

புரட்டாசி முடியும் தருவாயில் நல்ல விலை கிடைக்கும் என்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...