திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - சிறப்பு விருந்தினராக அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூலனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குமாரபாளையம் மற்றும் பெரமியம் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



திருப்பூர்மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றி மேலும் அரசின் சிறப்பு திட்டங்கள் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பள்ளி குழந்தைகளின் கல்வி ஆகியவை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினார்.

இந்த கூட்டத்தில் குமாரபாளையம் ஊராட்சி தலைவர் செந்தில் வடிவு சிவசாமி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து பெரமியம் ஊராட்சியில் ஊராட்சித் துணைத் தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில அரசின் திட்டங்கள் குறித்தும் வளர்ச்சியை குறித்தும் இதுவரை தமிழ்நாடு அரசு இரு ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து காணொளி காட்சி மூலமாக அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலனூர் வட்டாரத்தில் தற்போது தமிழக அரசின் செயல்பாட்டில் உள்ள தோட்டக்கலைத்துறை வேளாண்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட திட்டங்கள் பற்றிஉட்பட்ட

கண்காட்சி பொருட்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறி அந்தப் பகுதி விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் பொருள்களை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பெரமியம் ஊராட்சி தலைவர் ராணி போளூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுமதி கார்த்திக் மூலனூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் துரை தமிழர் மோகனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மக்கள் தண்டபாணி ஒன்றிய இளைஞரணி மற்றும் மாநில விளையாட்டு துறை துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...