பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் - கோவையில் விழிப்புணர்வு பயணம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையிலிருந்து பூடான் நாட்டிற்கு செல்லும் தன்னார்வலர்களின் இருசக்கர வாகன பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.


கோவை: சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் கோவையில் இருந்து பூடானுக்கு விழிப்புணர்வு பயணம் தொடங்கபட்டது

நவீனமயமாக்கப்பட்ட உலகில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மொபைல் போன் செயலி மற்றும் கணிணி தொழில்நுட்பங்கள் மூலம், பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சைபர் கிரிமினல்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகளிடம், செயலிகள் வாயிலாக தொடர்பு கொண்டு, தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையிலே, பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இரண்டு தன்னார்வலர்கள் விழிப்புணர்வு வாகன பயணத்தில் ஈடுபடுகின்றனர்.



இதற்கான துவக்க நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்தார்.

கோவையை சேர்ந்த தன்னார்வலர்களான சைபர் கிரைம் கன்சல்டண்டு சங்கர் ராஜ் சுப்ரமணியன் மற்றும் தன்னார்வலர் தினேஷ்குமார் இருவரும் இருசக்கர பயணத்தின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.



கோவையில் இருந்து பூடான் நாட்டின் திம்பு வரை இரு சக்கர வாகனத்தில் 14 நாட்களுக்கு சுமார் 6,500 கிலோ மீட்டர் தூரம், இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.



இது குறித்து விழிப்புணர்வு பயணம் செல்லும் இளைஞர்கள் கூறுகையில், இந்த பயணம் முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும் 14 நாட்கள் 6500 கிலோ மீட்டர் தூரமாக பூடான் செல்ல உள்ளதாகவும், அந்த நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தனர் . பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண் குழந்தைகள் , பெண்கள் , நிறுவனங்கள் என பல இடங்களில் சைபர் கிரை குறித்து விழிப்புணர்வில் ஈடுபட இருப்பதாகவும், இதற்காக கோவை போலிசார், இந்தியா மற்றும் பூட்டான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பை தருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்திருக்கின்றனர் .

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...