பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் - விவசாயிகளுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-24 ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட 2016-17 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி தற்போது விவசாயிகள் ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சோளம் மக்காசோளம் மற்றும் கொண்டைகடலை பயிர்களுக்கு தற்போது அறிவிக்கை பயிர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வருடம் யுனிவர்சல் சாம்போ பொதுக்காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆகவே,கோவை மாவட்ட விவசாயிகள் அக்டோபர் 2023 முதல் சாகுபடி செய்யப்படும் சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.144.75/- கட்டணமாக செலுத்தி 15.12.2023 வரையிலும், கொண்டை கடலைபயிருக்கு ஏக்கருக்கு ரூ.210/- செலுத்தி 15.11.2023 வரையிலும் மற்றும் மக்காசோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.519.75/- கட்டணமாக செலுத்தி 15.11.2023 இறுதிவரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதற்காக விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் எண் அட்டைநகல், வங்கிகணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியஆவணங்களுடன் பொது இ- சேவைமையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு, கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்காப்பீட்டிற்கான பிரிமியத் தொகையினை செலுத்தி பதிவு செய்யலாம்.

மேலும் பயிர்காப்பீடு தொடர்பான விவரங்களைப் பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...