கோவையில் உலக விண்வெளி வார கொண்டாட்டம் - கண்காட்சியை பார்வையிடும் பொதுமக்கள்

உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு கோவையில் துவங்கிய மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.


கோவை: உலக விண்வெளி வார நாளையொட்டி நடைபெற்ற கண்காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



அக்டோபர் 4ம்தேதி முதல் 10 ம்தேதி வரை, உலக விண்வெளி வாரமாக கடைபிடிக்க பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஶ்ரீ ஹரிகோட்டா இந்திய விண்வெளி மையம், சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய விண்வெளி கண்காட்சி துவங்கியது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் எஸ்.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி, உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ராக்கெட்டுகள் மாதிரி, சந்திராயன் 3, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.



இந்த கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் கண்காட்சியில் பங்கு கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கண்காட்சி குறித்த போட்டிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், விண்வெளி ஆய்வுகள் தொடர்பான சிறப்பு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...