கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரியினங்கள் செலுத்துதல் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், பாலுாட்டும் அறை இல்லாததால் தாய்மார்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிவந்தனர். இந்த அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாம் நடந்தது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சென்ற நிலையில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல் சிரமப்பட்டதை அறிந்து, மேடைக்கு பின்புறம் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிலையில், அலுவலக வளாகத்தில் இருக்கும் பொது மக்கள் காத்திருப்பு அறையில், கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...