சென்னையில் ஆசிரியர்கள் கைதுக்கு எதிர்ப்பு - கோவையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்துள்ளதாக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் கைது நடவடிக்கை கண்டித்தும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சென்னையில் பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறை துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தராஜ், சுதாகர், விக்டோரியா, அருணா, கிருத்திகா உள்பட 250 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...