மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நான்கு மாதங்களுக்குப் பின் ஈர நெஞ்சம் அறக்கட்டளையால் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவை, சரவணம்பட்டி சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி பொதுமக்களால் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டார்.



அப்பெண்ணை தொடர்ந்து பராமரித்து வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை அளித்துவந்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் புலி வளம் என்னும் பகுதியை தெரிவித்துள்ளார். அதன்படி புலிவளம் குறித்து விசாரணை மேற்கொண்ட அறக்கட்டளையினர் அந்தப்பகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது என கண்டறிந்தனர். 

அதனைத்தொடர்ந்து, திருவாரூர் காவல்நிலையத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனவர் பட்டியல் உள்ளிட்டவற்றை சோதனை செய்த காவல்துறையினர், அப்பெண் சத்யா என்பவரது தாய் ராஜேஸ்வரி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டறிந்தனர்.



இதைத்தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வந்த சத்யா, நான்கு மாதங்களுக்குப் பின் தனது தாயைக்கண்டு நெகிழ்ச்சியுற்றார். தொடர்ந்து தாயும், மகளும் கட்டித்தளுவி மகிழ்ச்சியில் அழுத காட்சி அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.

இதுகுறித்து சத்யா தெரிவிக்கையில், நான்கு மாதங்களுக்கு முன்பு எனது தாய் திருவாரூரில் காணாமல் போனார். நாங்கள் பல்வேறு பகுதியில் அவரை தேடினோம். எங்கும் காணவில்லை. தற்போது கோவையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் எனது தாய் மீண்டும் என்னுடன் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை' என தெரிவித்தார். 

இதனையடுத்து, ராஜேஸ்வரியின் சில ஆவணங்களை சரிபார்த்து உறுதிசெய்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் மீது கூடுதல் கவனம்  செலுத்தி பாதுகாக்குமாறு அறிவுரைகூறி மகள் சத்யாவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...