கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஆனைகட்டி கிராமம் தமிழக, கேரள எல்லையான இங்கு அதிகமான யானைகள், சிறுத்தை காட்டெருமைகள் உள்ளன. இந்நிலையில் ஆனைகட்டி ஆர்நாற்காடு கிராமம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தை இறந்து நிலையில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர் சோதனை நடத்தியதில் சிறுத்தையின் உடல் அருகே மாடு ஒன்று இறந்து கிடப்பதால் மாட்டில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது மாட்டை வேட்டையாடும் போது சிறுத்தை இறந்ததா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் இறந்தது மூன்று வயது மதிக்க தக்க பெண் சிறுத்தை என்றும், உயிரிழப்பின் காரணம் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியும் என கூறினர். இதே பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சிறுத்தை கடித்து நான்கு ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.