தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி டாஸ்மார்க் மதுபான கடையை முற்றுகையிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்_பூளவாடிசாலை தேர்பாதை பகுதியில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

தேர்பாதை சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் டாஸ்மார்க் மதுபான கடையை அகற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி டாஸ்மார்க் மதுபான கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம்-பூளவாடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் மாற்றப்பட்டுள்ளது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் தனி வட்டாட்சியர் ஜெகஜோதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இவ்வழியாக சென்றபோது பொதுமக்கள் அமைச்சரிடம் இப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதால் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் மனு அளித்தும் டாஸ்மாக் கடையை அகற்ற இன்று வரை யாரும் கண்டு கொள்ளாததால் கடையை அகற்றும் வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.