ஈ.சி என்ற பூச்சி மருந்தை  உற்பத்தி செய்து சந்தைப்படுத்த கோவை வேளாண் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும் ஈகோ பயோசைட்ஸ்‌ மற்றும் பொட்டானிக்கல்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்டுடன பூச்சி மருந்தை பெரிய அளவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது.


கோவை: பூச்சி தாக்குதலை ஆறு மாதத்திற்கு கட்டுப்படுத்தும்‌ திறமை படைத்த புதிய பூச்சிக்கொல்லி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ வேளாண்‌ வளாக மேம்பாட்டு இயக்குனரகம்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால்‌ வெளியிடப்படும்‌ தொழில்நுட்பங்கள்‌, இயந்திரங்கள்‌ மற்றும்‌ வீரிய ஒட்டு ரகங்கள்‌ ஆகியவற்றை வணிகமயமாக்கி வருகின்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ தேனியை சார்ந்த ஈகோ பயோசைட்ஸ்‌ & பொட்டானிக்கலஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ இடையய “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்‌ வசம்பு 6 சதம்‌ ஈ.சி” என்ற பூச்சி மருந்தை பெரிய அளவில்‌ உற்பத்தி செய்து சந்தைப்படுத்த பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.க கீதாலட்சுமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

இந்த புதிய பூச்சிக்கொல்லி மருந்து, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ பாதுகாப்பு மையத்திலுள்ள பூச்சியியல்‌ துறை விஞ்ஞானிகளால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூச்சி மருந்து, வசம்பு கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்‌ கொண்டு தயார்‌ செய்யப்படுகின்றது. இந்தப்‌ பூச்சி மருந்து உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயிறு மற்றும்‌ கொண்டைக்கடலை விதைகளில்‌ பூச்சி தாக்குதலை ஆறு மாதத்திற்கு கட்டுப்படுத்தும்‌ திறமை படைத்தது.

தமிழ்நாடு வேளாணர்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சார்பில்‌ அதன்‌ பதிவாளர்‌ (முனைவர்‌ ஆர்‌.தமிழ்வேந்தன்‌, மற்றும்‌ ஈகோ பயோசைட்ஸ்‌ & பொட்டானிக்கலஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ சார்பாக அதன் நிர்வாக இயக்குனர்‌ .எம்‌.கருணாகரன்‌ ஆகியோர்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

வேளாண்‌ வளாக மேம்பாட்டு இயக்குனர்‌ முனைவர்‌ ஈ.சோமசுந்தரம்‌, பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ எம்‌.சாந்தி, பூச்சியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ சா.ஜெயராஜன்‌ நெல்சன்‌ ஆகியோர்‌ இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...