வரும் 31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக் ஊக்கத் தொகை - கோவை மாநகராட்சி அறிவிப்பு

2023-24ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்து வரியினை நடப்பு மாதம்‌ 31.10.2023-க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமைதாராகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5 சதவீதம் ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌ என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோவை: சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாநகராட்சி செலுத்தவேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்‌ கட்டணம்‌ மற்றும்‌ கடை வாடகைகள்‌ முதலிய அனைத்து வரி மற்றும்‌ வரியில்லா இனங்களை செலுத்துமாறு பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

2023-24ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை நடப்பு மாதம்‌ 31.10.2023-க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமைதாராகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5% ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌ என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

எனவே, பொது மக்களின்‌ வசதியினை கருத்தில்‌ கொண்டு கோயம்புத்துர்‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்‌ கட்டணம்‌ மற்றும்‌ கடை வாடகைகள்‌ முதலிய அனைத்து வரி மற்றும்‌ வரியில்லா இனங்களை செலுத்த ஏதுவாக கீழ்க்கண்ட பகுதிகளில்‌ 14.10.2023 மற்றும்‌ 15.10.2023 ஆகிய நாட்களில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.56 மற்றும்‌ 57 பகுதிகளுக்கு ஒண்டிபுத்தூர்- நெசவாளர்‌ காலனி- சுங்கம்‌ மைதானத்திலும்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 35ல்‌ இடையாபாளையம்‌ - தேவாங்க நகா்‌-கற்ப விநாயகர்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு 39ல்‌ தொண்டாமுத்தூர்‌ ரோடு-தச்ஸா சான்ஸ்ட்ராய்‌ முதலாம்‌ அடுக்குமாடி குடியிருப்புகளிலும்‌, 40 வி.என்‌.ஆர. நகா்‌ நியாயவிலைக்கடையில்‌ சனிக்கிழமை அன்றும்‌, வார்டு 75ல்‌ சீரநாயக்கன்‌பாளையம்‌ நேத்தாஜி சாலை - மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்தில்‌ ஞாயிற்றுக்‌ கிழமைகளிலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளன.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வார்டு 88ல்‌ குனியமுத்தூர்‌ - தர்மராஜா கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு 94ல்‌ மாச்சம்பாளையம்‌ - மாரியம்மன்‌ கோவில்‌ வாளத்திலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளன. வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.11ல்‌ ஜனதா நகர்-ஆரம்பப்பள்ளியிலும்‌, வார்டு எண்‌.28ல்‌ இளங்கோ நகர்-மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும்‌, 25ல்‌ காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்‌ பள்ளியிலும்‌ நடைபெறுகிறது. மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 32ல்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு 63ல்‌ பெருமாள்‌ கோவில்‌ வீதி பகுதியிலும்‌, வார்டு எண்‌ 80ல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில்‌ நடைபெறும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ மற்றும்‌ மாநகராட்சியின்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 வரை செயல்படும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ இவ்வசதியினை முழுமையாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை செலுத்தலாம்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...