நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், உதகை நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிறு சிறு மரங்கள் விழுந்தது. இதனை தீயனைப்புத் துறையினர் தொடர்ந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று உதகையில் மழை இல்லாத நிலையில் மண்ணின் ஈரத் தன்மை காரணமாக குன்னூர் உதகை தேசியநெடுஞ்சாலை பாலவாசி பகுதியில் தீடீரென பெரிய கற்பூரமரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதுகுறித்த தகவலறிந்த குன்னூர் தீயனைப்புத் துறையினர் மற்றும் தேசியநெடுஞ்சாலைத் துறையினரின் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
முன்னதாக சாலையில் மரம் விழுந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.