கோடநாடு கொலை வழக்கு விசாரணை அய்யப்பனிடம் நிறைவு - சிபிசிஐடி விசாரணை திருப்தி என தகவல்

கோடநாடு கொலை- கொள்ளை வழக்கில் கனகராஜ் சக ஓட்டுனர்களுக்கு சங்கடத்தை கொடுத்து விட்டதாக அய்யப்பன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடியிடம் அய்யப்பனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தப்பட்ட மறைந்த அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம்விசாரணை நடைபெற்றது. மாலை சுமார் 6 மணியளவில் விசாரணை முடிந்து வெளியில் வந்த அய்யப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கனகராஜ் தொடர்பான கேள்விகளை சிபிசிஐடி போலீசார் கேட்டதாகவும் அவர் குறித்து தெரிந்த தகவல்களை தான் தெரிவித்ததாகவும் கூறினார். குறிப்பாக கனகராஜின் நடவடிக்கைகள், சுபாவம் தொடர்பாக கேட்டனர் என்றார்.

3 சிபிசிஐடி அதிகாரிகள் இந்த விசாரணையில் இருந்ததாகவும் இவர்கள் புதியவர்கள் எனவும் தெரிவித்தார். 2 ஆண்டுகள் தான் கனகராஜ் டிரைவராக இருந்தார் என தெரிவித்த அய்யப்பன்,

ஜெயலலிதாவிடம் 6-7 ஓட்டுனர்கள் இருந்தோம், ஜெயலலிதாவிற்கு என்னை தவிர கண்ணன் என்ற ஓட்டுனரும் இருந்தார் என தெரிவித்தார்.

கனகராஜ் ஜெயலலிதாவிற்கு ஓட்டுநராக இல்லை, அலுவலக வேலையை பார்த்து கொண்டிருந்தார் என கூறிய அவர், இரவு நேரங்களில் அவர் இருப்பார் என்றார்.

ஓட்டுனர்கள் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்க முடியாது, ஜெயலலிதாவிற்கு அது பிடிக்காது எனவும் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கோடநாடு எஸ்டேட் சென்றுள்ளேன், ஆனால் தங்களுக்கு(ஓட்டுநர்கள்) பங்களாவிற்குள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது எனவும் தனிப்பட்ட முறையில் யாரும் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார். ஜெயலலிதாவை பங்களா வாசல் படிக்கட்டில் விட்டு விட்டு வந்து விடுவோம் என தெரிவித்தார்.

ஓட்டுனர் கனகராஜ் எங்கள் எல்லாருக்கும் சங்கடத்தை கொடுத்துவிட்டார் என தெரிவித்தார். மேலும் கனகராஜ் வேலையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் அரசியல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக கூறினார்.

சிபிசிஐடி விசாரணை திருப்திகரமாக இருந்தது எனவும் எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம்பெறப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஓட்டுனர் கனகராஜ் முறையாக பணி செய்யவில்லை என்பதால் அவர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என தெரிவித்தார். 2021 மே மாதம் சொந்த காரணங்களால் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினேன் எனவும், தற்போது எந்த பணியிலும் இல்லை எனவும் 30 ஆண்டுகள போயஸ் கார்டனில்பணியாற்றி உள்ளேன் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...