கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக அவ்வளாகத்தில் காலியாக இருந்த இடம் ஒதுக்கப்பட்டு, அதில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், புதிய கட்டிடத்திற்கா சுமார் 20.18 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்றன.
கட்டிடம் முழுதாக கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் தமிழக அரசியல் காரணங்களால் திறப்புவிழா நடத்த காலதாமதமானது. இந்த நிலையில், நாளை புதிய கட்டிடம் திறக்கப்ப்ட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கும் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அவருடன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தமிழக அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

விழா முடிந்ததும் கொடீசியா அரங்கத்திற்கு செல்லும் முதலமைச்சர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைப்பதோடு, 6 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட் உதவிகள் வழங்க உள்ளார்.
முதலமைச்சர் கோவை வருகையை ஒட்டி கோவை தொழில் முனைவோர் சங்கங்களின் சார்பில் முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.