கோழிப்பண்ணையில் பணியாற்றிய ஆறு சிறுவர்கள் அதிரடியாக மீட்பு

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் சிறார்கள் பணியாற்றுவதுவதாக புகார் வந்ததை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வு மேற்கொண்டதில் 6-சிறார்களை மீட்கப்பட்டனர்.


திருப்பூர்: குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பெல்லம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 6-குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களின் குழந்தைகள் அதேபண்ணையில் பணியாற்றுவதாக 1098-எண்ணுக்கு புகார் வந்தது இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மையம் அலுவலர்கள் மற்றும் குண்டடம் போலீசார் அங்கு கள ஆய்வு செய்தனர் அதில் 13-வயது முதல் 17-வயது வரை உள்ள 6-சிறார்கள் கடந்த 2 -மாத காலமாக பணியாற்றிவந்தது தெரியவந்ததை உறுதி செய்தனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.280 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறார்களை மீட்ட காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தாய்மொழி பள்ளிகள் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர் இதையடுத்து குடும்பத்தினர் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...