மடத்துக்குளம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை கோட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை கோட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு மேலாண்மைக்கான விருதுகளும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன், பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கார்த்தி, பத்மா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வி. ஜெயராமன் கூறியதாவது, உடுமலை கோட்டத்தில் மொத்தம் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 20 முகாம்கள் வீதம் 2024 ம் ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விபரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்

முகாமில் சிகிச்சை, மலடுநீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தாது உப்பு, வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.

கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணர்வு முகாமுக்குகால்நடைகளை கொண்டு வந்து மேற்படி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...