சமூக விரோதி கூடாரமாக மாறிய உக்கடம் பேருந்து நிலையம்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

உக்கடம் பேருந்து நிலையத்தில் அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: சமூக விரோதிகளின் கூடரமாக உக்கடம் பேருந்து நிலையம் மாறியுள்ளதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரத்தில் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்க தினந்தோறும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பேருந்து நிலைய பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடைய பேருந்து நிலையம் முழுவதும் மாநகராட்சி பராமரிப்பு இல்லாமல் தூசி காடாகவும், குப்பை மேடாகவும் காணப்படுகிறது.



அதே போல அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளனர். இங்கு தினந்தோறும் இரவில் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வரும் மக்கள் முகம் சுழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...