அதிமுக கொண்டு வந்த திட்டங்களை கூறி பொதுமக்களிடம் வாக்கு கேளுங்கள் - முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிஅறிவுரை

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடந்த அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் கொண்டு வந்த 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்குமாறு கோவையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டுமென அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு எஸ்பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவை இதய தெய்வம் மாளிகையில் கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பிவேலுமணி, கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான ஜெயவர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-



வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் 5 ஆண்டுகளில் கொண்டு வந்த 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

தற்போது இருக்கின்ற தி.மு.க அரசு எந்த விதமான மக்கள் நல திட்டதங்களையும் கொண்டு வரவில்லை. நாம் ஏற்கனவே உருவாக்கிய திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.



தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மிக துரிதமாக வேலை செய்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பொறுப்பாளர் ஜெயவர்த்தனன் பேசும்போது, கோவை மாவ ட்டத்தில் இருக்கக்கூடிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் எளிய மக்களின் துயர் துடைப்பவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் நலத்திட்ட ங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக பெருவாரியான வெற்றிகளை பெற வேண்டும் அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.



இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் செம.வேலுசாமி, பீளமேடு துரைசாமி, பிரபாகரன், புரட்சி தம்பி, லாலி ரோடு ராதா, செல்வகுமார், சிவகுமார், சாரமேடு சந்திரசேகரன், இலக்கடை ஜெயபால், காலணி கருப்பையா, ராஜ்குமார், மனோகரன், பப்பையா ராஜேஷ், கமலக்கண்ணன், மெட்டல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...