நிலவுக்கு இந்தியா மனிதனை அனுப்ப 10 ஆண்டுகள் ஆகும் - மயில்சாமி அண்ணாதுரை தகவல்

நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகின்றது, சில வருடங்களில் அது நடக்கும், இந்தியா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் கோவையில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


கோவை: நிலவுக்கு இந்தியா மனிதனை அனுப்ப 10 ஆண்டுகள் ஆகும் என மயில்சாமி அண்ணாதுரை விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.



பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுதந்திரந்திற்கு பின் 30 ஆக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் 72 ஆக அதிகரித்து இருக்கின்றது என்றார். இதயம் எப்படி முக்கியமோ, அதுபோல பல் முக்கியம் எனவும், இருதய அறுவை சிகிச்சை எப்படி பல மாற்றங்களை தாண்டி இருக்கின்றதோ, அது போல பல்லின் சிகிச்சையும் பல மாற்றங்களை சந்தித்து இருக்கின்றது என தெரிவித்தார்.

விக்ரம் லேன்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே அதற்கான ஆயுட் காலம் நிறைவு பெற்றது. பிரஞ்ஞான் அலைவரிசை, விக்ரம் அலைவரிசை இரண்டும் இணைந்தால் தான் தகவல் கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் இப்போது பிரஞ்ஞான் உயிரோடு இருந்தாலும் செய்தி பரிமாற்றம் இருக்காது எனவும், சந்திராயன் 3 பணி நிறைவடைந்து இருப்பதாகவே நான் பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

ரோவருக்கு புதிய ஆபத்து வருகிறதா என்ற கேள்விக்கு சந்திரனில் விண்கற்கள் விழுவது என்பது சகஜம் எனவும் பூமியிலும் விழுகின்றனம், இங்கு வாயு இருப்பதால் எரிந்து விடுகின்றன எனவும் , ஆனால் நிலவில் அவ்வாறு இல்லாததால் விழுகலாம் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என பதிலளித்தார்.

ககன்யான் திட்டம் அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது எனவும், இது சிறு அங்கம்தான் என்றார். ககன்யான் கடைசி நொடியில் நிறுத்தப்பட்டு, அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் செலுத்தப்பட்டது எனவும், இது இந்திய விண்வெளி துறையில் சிறப்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர், இதில் பல கட்டங்களை தாண்ட வேண்டும் எனவும், இது முதல் கட்டம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.

குலசேகரபட்டினம் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் , ஏவுதளம் அமைப்பதை தாண்டி, எரிபொருள் தயாரிப்பது உட்பட திட்டங்ளை கொண்டு செயல்பட அது சிக்கனமாக ஏவுதளமாக அமையும் எனவும், சிறிய ரக செயற்கை கோள்கள்தான் இப்போது அனுப்பபடுகின்றது. தினமும் ஒன்று ரெண்டு அனுப்பும் நிலை வரலாம், அப்போது சிறப்பான இடமாக குலசேகரபட்டினம் ஏவுதளம் இருக்கும், அதற்கான கட்டமைப்புகள் வரும் போது பலன் அளிக்கும் எனத் தெரிவித்தார்.

தமிழக அளவில் விஞ்ஞானிகளுக்கு அரசு சார்பில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது உந்து சக்தயாக இருக்கும் எனவும் சர்வதே விண்வெளி மையத்தில் போட்டி என்பது கூடாது, அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இயங்க வேண்டும், இந்தியா வழி நடத்த வேண்டும் எனவும், அப்போதுதான் பிரச்சினைகள் வராது என தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையம் போட்டி உருவாக கூடாத இடமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விண்வெளி துறையில் இந்தியாவின் முன்னெடுப்புகள் வர்த்தக ரீதியாக பல நாடுகள் இந்தியாவை நோக்கி வரவழைக்கும் எனவும்,நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகின்றது, சில வருடங்களில் அது நடக்கும், இந்தியா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்தார். ஆயுட் காலம் நிறைவடைத்த பின்பு விண்களங்களை திரும்ப கொண்டு வருவது குறித்து இப்போதே ஆலோசிக்கபட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...