கோவையில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: 

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக, இளம்பெண் கணவரை பிரிந்து அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாபு சிவேஷ் (வயது 26) இளம்பெண் தனிமையில் வசிப்பதை அறிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறி தன்னுடன் வருமாறு அழைத்தார். பின்னர் இளம்பெண்ணிடம் அவர் திருமணம் செய்து கொள்கிறேன், உன்னை ராணிபோல் பார்த்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய இளம்பெண் பாபு சிவேஷ்சுடன் மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.

மேட்டுப்பாளையத்தில் ராமசாமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்ணை பாபு சிவேஷ் தங்க வைத்தார்.

அதன் பின்னர் பாபு சிவேஷ், தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை மிரட்டி 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த இளம்பெண் நடந்த சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.

மேலும் 2 பேரும் மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதோடு விடாமல் அந்த இளம்பெண்ணை கோவை மற்றும் ஊட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலருடன் உடலுறவு கொள்ள வைத்து பணம் சம்பாதித்து வந்தார்.

கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண் விக்னேஷ்பாபுவிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை இளம்பெண் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல், நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி சேர்ந்த செந்தில்குமார் (36) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு சிவேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.



நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரமேஷ் என்பவர் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...