உடுமலை அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து பூஜ்ஜியம் - விவசாயிகள் கவலை

மழை குறைந்ததின் காரணமாக உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து பூஜ்ஜியம் ஆனதால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


திருப்பூர்: இரண்டு நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் உடுமலை சுற்றுப்புற பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. ஆனால் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று பூஜ்ஜியமானது.

உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்து உதவவில்லை.இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு, பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமராவதி ஆறு, பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற சிறப்பு நனைப்புக்கும் குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் பாசன பரப்புகளில் நிலவுகின்ற தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமல் போராடி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் உடுமலை சுற்றுப்புற பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. ஆனால் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று பூஜ்ஜியமானது.



அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர் இருப்பும் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 56.40 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1440 கனஅடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...