கோவை மாநகராட்சியில் செயல்படும் அரசு மாணவர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிகள், ஆதிதிராவிடர் மாணவர்களின் நல விடுதிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் உண்டு பரிசோதித்தார்.



மேலும் அங்கு தங்கியுள்ள மாணவர்களிடமும் அங்குள்ள வசதிகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை உடன் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உடன் இருந்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...