முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூர் திமுக ஊராட்சி தலைவரின் முறைகேட்டை தட்டி கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: முறைக்கேட்டை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சூலூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைதாக்கியதாக திமுக நிர்வாகியை கண்டித்துவிவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயியான ரமேஷ் என்பவர் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

அப்போது திமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவரின் ஆதரவாளர்கள், ரமேஷை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவசாயி ரமேஷ் தரப்பில் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விவசாயி ரமேஷை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி, திமுக ஒன்றிய செயலாளர் அன்பரசு மற்றும் அவரது ஆதரவாளர்களை கண்டித்து சூலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி ரமேஷை தாக்கிய திமுக ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசூர் ஊராட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயி ரமேஷ் பேசும்போது, அரசூர் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் மற்றும் பணம் கையாடல் நடந்துள்ளது. 10 வருடங்களாக ஊராட்சி செயலாளராக இருக்கும் கணேசன் மூர்த்தி என்பவர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதுடன் தனது பெயரிலேயே சுமார் 3.30 கோடி ரூபாய் அளவுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களை கேட்டு பெற்றுள்ளேன்.

இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது, ஊராட்சி மன்றத்தை எதிர்த்து கேள்வி கேட்கிறாயா? என கூறிக்கொண்டு ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் என்னை பயங்கரமாக தாக்கினர். அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன்.

இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் கூறுகையில், அதிகாரிகளின் துணையோடு நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த விவசாயி மற்றும் சமூக ஆர்வலர் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்களை வெறி கொண்டு வர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...