அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் பெறுவதே சந்தேகம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு சேலம் இரும்பு ஆலையை தனியார் மையாமாக மாற்றகூடாது. லாபகரமாக நடக்கும் இந்த இரும்பு ஆலையினை தனியாருக்கு கொடுத்தால் சேலத்தில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடக்கும்.
ஆர்.கே. நகரில் தி.மு.க. அமோக வெற்றி பெரும். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.
மே 16-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவ்வாறு நடைபெறுமானால் ஆளும் கட்சியால் ஒரு பஞ்சாயதில் கூட வெற்றி பெற முடியாது.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் டெபாசிட் வாங்குவதே சந்தேகம். அத்தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது தமிழக தேர்தல் ஆணையம் அலட்சிய போக்கை கைவிட்டு பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.