கோவாவில் நடைபெறும் களரி பயட்டு போட்டி - உடுமலை வீரர்கள் எட்டு பேர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டுப் களரி பயட்டு போட்டியில் தமிழக அணி சார்பாக உடுமலை வீரர்கள் 8 பேர் கலந்து கொள்கின்றனர்.


திருப்பூர்: உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் களரி பயட்டு போட்டியில் பங்கேற்கும் உடுமலை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

தேசிய அளவிலான 37 வது களரிப்பயட்டு போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 தேதி கோவாவில் நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை சார்பில் வீ ஜீவா, கே.ருத்ரேந்தர், டி.விக்னேஸ்வரன், எம்.முத்துச்செல்வம், வி.தரன், எம்.விக்னேஷ், ஆர்.ராமசந்திரன், கே.விசாலி ஆகியோர் களரி பயட்டு போட்டியில் உடுமலை மடத்துக்குளம் பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றனர். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர், எஸ்.ஆர்.எஸ்.செல்வராஜ் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர், மூர்த்தி பணி நிறைவு நூலகர், கணேசன் ஜிவிஜி காசாளர், சங்கர மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும். அதில் முதல் முறையாக களரிப்பயட்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம் மாதம் தொடங்குகிறது போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். களரிப் பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 & 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இதில் 300 மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்களைகள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். தமிழகம் சார்பாக 8 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். ஏழு வகையான பிரிவுகளில நடைபெறுகின்றது.

சுவடு, மெய்பயட்டு, உருமிவீசல், சவுட்டி பொங்கல், கைப்போர், கேட்டுக்கரி வாளும் பரிச்சா ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் மாநில செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...