நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நடைபாதையை ஆய்வு செய்தார் கோவை மாவட்ட ஆட்சியர்

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நடைபாதையை கோவை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் இணைந்து ஆய்வு செய்தனர்.


கோவை: நடை பாதை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் என்றும் இந்த நடைபயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நடப்போம் நலம் பெறுவோம்" என்ற நடைபயிற்சி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 8 கிமீ தூரம் கொண்ட நடைபாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் த.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 04.11.2023 அன்று சென்னையிலிருந்து நடப்போம் நலம் பெறுவோம்- (Health Walk) என்ற நடைபயிற்சி திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கவுள்ளார்.



அதன்படி கோவை மாவட்ட பொது மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு *நடப்போம் நலம் பெறுவோம்" என்கிற இத்திட்டத்திற்கு ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் தொடங்கி - திருச்சி சாலை - GH சிக்னல் வாலாங்குளம் (முழு சுற்று) GHசிக்னல் - திருச்சி சாலை வெஸ்ட் கிளப் ரோடு - ரேஸ்கோர்ஸ் (முழு சுற்று) - ஈஸ்ட் கிளப் ரோட்டில் முடியும் வகையில் 8 கிமீ தூரம் கொண்ட நடைபாதையை கண்டறிந்து ஆரோக்கியமான நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த பாதையை மாவட்ட ஆட்சி தலைவரால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. இது மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும். இந்த நடைபயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

மேலும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மாவட்ட அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் இந்த நடைப்பயிற்சியில் பங்கேற்பார்கள்.



மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பாதையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் இயன்முறை மருத்துவர், ஒரு தன்னார்வலர், சுகாதாரப் பணியாளர் ஆகியோரை கொண்ட மருத்துவக் குழுவின் உதவி மையம் அமைக்கப்படவுள்ளது.



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் முன்பக்கத்தில் நடைப்பயிற்சிக்கான நுழைவு வாயில் தொடங்கி, 1வது கி.மீக்கு வாலாங்குளம் மக்கள் நடைபாதை முன்பக்கத்திலும், 2வது கி.மீக்கு மேற்கில் உள்ள உணவகம் அருகிலும், 3-வது கி.மீக்கு மனு மருத்துவமனை அருகிலும், 4வது கிமீக்கு டிடிடீசி ஹோட்டல் அருகிலும், 5வது கி.மீக்கு மேற்கு கிளப் ரோடு. ஐடிசி ஹோட்டல் அருகிலும், 6வது கி.மீக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் முன்பகுதியிலும், 7வது கிமீக்கு டி ஸ்டேன்ஸ் கம்பெனி லிமிட் முன்பகுதியிலும், 8வது கி.மீக்கு Zone 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்கள் விடுதி முன்பகுதியிலும், என ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...