தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29ம் ஆண்டு விழா- மாலை மாற்றிக் கொண்ட 106 தம்பதிகள்

தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29-வது ஆண்டு விழா, அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் 113-வது ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாள் 109-வது பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழா தாராபுரம் அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரததில் நடந்த அறிவு திருக்கோவிலில் ஆண்டு விழாவில் 106 தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர்.

தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29-வது ஆண்டு விழா, அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் 113-வது ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாள் 109-வது பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழா தாராபுரம் அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் தாராபுரம் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் மருத்துவர் தங்கராசு வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஆயிமுத்துரத்தினம் ரத்தினம், பொருளாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அருட்செல்வி தம்பதியினர் உயிர்கலப்பு தவம் மற்றும் மலர் கனி பரிமாற்றம் செய்து வைத்தார்.

அதில் 106 தம்பதிகள் கலந்து கொண்டு மாலை மாற்றி, மலர் மற்றும் கனி பரிமாறிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பேராசிரியர் நீலகண்டன் மனவளக்கலையின் மாண்பு குறித்து பேசினார். இதில் அரிமா சிவக்குமார் மற்றும் அரிமா சங்க அறக்கட்டளை நிர்வாகிகள், தாராபுரம் அறிவுத்திருக்கோவில் நிர்வாகிகள், தம்பதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தாராபுரம் நகர அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...