மணக்கடவு பகுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறை விசாரணை

அலங்கியம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணக்கடவு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் சரவணன், தனது காதலி தற்கொலை செய்து கொண்டதை தாங்கமுடியாமல், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது20). இவர் முத்தூர் அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த தாராபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சரவணனின் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தநிலையில் காதலனான சரவணன் காதலி தற்கொலை செய்த நாள்முதல் காதலியை நினைத்து மனம் உடைந்த நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். இது குறித்து பெற்றோர் பலமுறை சரவணனிடம் கேட்டும் ஒன்றும் இல்லை என சரவணன் பதில் கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தந்தையிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். சரவணன் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்காமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த தந்தை பெரியசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சரவணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அலங்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...