தாராபுரத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி வட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது, தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், வேளாண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்றைய தினம், தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...