கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நாளை துவக்கம்

ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு நாக்பூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு இம்மாநாடு கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.



மேலும், இந்த பிரதிநிதிகள் குழு சந்திப்பின் போது, பொதுச்சௌலாளர் உள்ளிட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த மூன்று ஆண்டுகளும் இக்கூட்டத்திலேயே இப்பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் நாளை துவங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 1500 மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் உள்ள 11 மண்டலங்கள் மற்றும் 42 மாகாணங்களில் தமிழ்நாடு வடக்கு மற்றும் தெற்கு தமிழ்நாடு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் இருந்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிகழ்வின் போது பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்றி வரும் இவ்வமைப்பினர் தங்களது அனபவங்கள் குறித்தும், அடுத்தகட்ட இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும். இதில் நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், அழிந்துவரும் மற்றும் பற்றாக்குறையான இந்திய பாரம்பரிய காளையினங்களை மேம்படுத்துதள் குறித்த கட்டுரை தொகுப்புகளும், விளங்கங்களும் இம்மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. 

இம்மாநாட்டினை தற்போதைய தலைவர் மோகன் மதுக்கர் பகவத் பங்கேற்று மாநாட்டினை துவக்கிவைப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. 

மேலும், இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேவையாற்றி வரும் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...