தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் - நீதிபதிகள் பங்கேற்பு

சட்டம் என்றால் என்ன? என்பது பற்றி பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பணி புரியும் இடத்தில் பெண்கள் செல்போனை பயன்படுத்துவது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் சினிமா நடிகர், நடிகை போல எண்ணி ஆண்களுடன் பழகி வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் என தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்ம பிரபு அறிவுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்ம பிரபு பேசுகையில் சட்டம் என்றால் என்ன? என்பது பற்றி பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.



மேலும் பணி புரியும் இடத்தில் பெண்கள் செல்போனை பயன்படுத்துவது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் சினிமா நடிகர், நடிகை போல எண்ணி ஆண்களுடன் பழகி வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம். பெற்றோர்களை நண்பர்களாக நினைத்து நெருங்கி பழகி பெற்றோர்களை முன்னோடிகளாக வைத்து அவர்களது கருத்துக்களை மதித்து நடக்க வேண்டும்.

மேலும் பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையும், நீதித்துறையும், சட்ட உதவி மையமும் செயல்படுகிறது. மாணவர்கள் மன அழுத்தம் குறைக்க யோகா, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு பேசுகையில், குடும்ப பெண்கள் யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை தெரியப்படுத்தக் கூடாது.



பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அதிகம் உள்ளது. மருத்துவ துறையில் செவிலியர்களின் செயல்பாடு நீதித்துறைக்கு பயன்பட வேண்டும்” என்றார். தாராபுரம் வக்கீல் சங்கச்செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் பேசுகையில், “பெண்கள் பயன்படுத்தும் செல்போனில் ஏற்படும் பயன்களையும், அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும்’’ எடுத்துரைத்தார். தாராபுரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் கலைச்செழியன் பேசும்போது, “கொரோனா தொற்றின் போது முன் களப்பணியாளராக செவிலியர்கள் மற்றும் நர்சிங் துறையைச் சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன” என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...