திருப்பூரில் இரண்டு வயது சிறுமியை கடித்த தெரு நாய்கள் - மருத்துவமனையில் அனுமதி

பெரியாண்டிபாளையம் பிரிவு பகுதியில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளியின் இரண்டு வயது சிறுமியை ஆறு தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் இரண்டு வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது இரண்டு வயது மகள் நைனிகா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த ஆறு தெரு நாய்கள் சிறுமியை கடித்து குதறி உள்ளது.



இதில் படுகாயம் அடைந்த சிறுமி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார காலம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இரண்டு வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து காயப்படுத்திய சம்பவம் மாநகராட்சி பகுதிக்குள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...