குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைத்தால்,சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் என்பதால் உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி 41வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி இந்த வார்டு கவுன்சிலர் சாந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், இது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதமே மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதாகவும், அங்கு ஒரு மயானமும் இருப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் எனவும் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் உடனடியாக அந்த டாஸ்மார்க் மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.