கள்ளக்கிணறு கொலை சம்பவத்தை தொடர்ந்து புதிய சோதனை சாவடி அமைப்பு

தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்லடம் தாராபுரம் சாலையில் புதிய சோதனை சாவடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில் அங்கு புதிய சோதனை சாவடி கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்கள் ரிப்பன் வெட்டி புதிய சோதனை சாவடியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் ADSP ஜான்சன், பொறுப்பு டிஎஸ்பி முத்துரத்தினம், காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோகன், மற்றும் ஊர் மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.



தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...