கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த திராவிடர் விடுதலை கழகத்தின் உறுப்பினர் மற்றும் இரும்பு வியாபாரி பாரூக் வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இன்று மீண்டும் ஒருவர் அந்த கொலை தொடர்பாக சரணடைந்துளார்.
கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமீது என்பவரது மகன் பாரூக். உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த இவருக்கு 3 ஆம் வகுப்பில் பயிலும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணி முடித்து வீட்டிலிருந்த அவருக்கு சுமார் 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தொழில் ரீதியாக பேச வேண்டும் எனவும், உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி வெட்டி படுகொலை செய்தனர்.
பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் நடந்த அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இருசக்கர வாகனத்திலும், ஒரு ஆட்டோவிலும் தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த நிலையில் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மீரன்குட்டி என்பவரது மகன் அன்சர்த் (31) என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாரூக் கொலை தொடர்பாக சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பரூக் கொலை வழக்கு தொடர்பாக போத்தனூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்தார். தற்போது அவரை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.