குழந்தைகளின் பள்ளிப்படிப்பிற்கு குடும்ப அட்டை தேவைப்படுவதாகவும், அது இல்லாமல் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறி கோவை போத்தனுர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்துவரும் நாங்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். 30 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்துவரும் எங்களுக்கு ஆதர் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அவை எங்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்க மட்டுமே பயன்படுகிறது.
அனால், எங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குடும்ப அட்டை தேவைப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், வாடகை வீடு மற்றும் சாலையோரம் வசித்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.