கோவை கீதா உணவகத்தில் குழந்தைக்கு ஆர்டர் செய்த உணவில் தடை செய்யப்பட்ட கூல் லிப் - கோவை வாசிகள் அதிர்ச்சி

பேபி கார்னை குழந்தைக்கு ஊட்டியபோது, ஜாஸ்மின் கண்களுக்கு வித்தியாசமான ஒரு பொருள் உணவில் இருப்பது தெரிந்தது. உற்று பார்க்கையில், பாப்கானில் இருந்த அந்தப் பொருள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களில் ஒன்றான கூல் லிப் பொருள் என்பது தெரியவந்தன.


கோவை: கோவையில் குழந்தைக்கு ஆர்டர் செய்த உணவில் கூல் லிப் குட்கா இருந்ததால்பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லத்தரசி ஜாஸ்மின். இவர் தனது வீட்டில் சிலிண்டர் காலியானதால், குழந்தைக்கு உணவு தர இணையத்தில் ஆர்டர் செய்திருக்கின்றார் ஜாஸ்மின்.

குழந்தைக்கு சைவ உணவு தர வேண்டும் என்பதனால், சாய்பாபா காலனி பகுதியில் உள்ள கீதா உணவகத்தில் உணவு வலைதளத்திலே ஆர்டர் செய்திருக்கின்றார்.



அப்பொழுது காம்போ ஆஃபரில் தயிர் சாதம், சாம்பார் சாதம் காம்போ மீல் மற்றும் பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை உணவுகளை ஆர்டர் செய்திருக்கின்றார் ஜாஸ்மின்.

உணவு டெலிவரி பாய் மூலம் உணவை பெற்று இருக்கின்றார். உணவு டெலிவரி செய்யும் பொழுது அதிலிருந்த பார்சல் பிரித்திருந்ததாக ஜாஸ்மின் தெரிவித்தார்.

பசியுடன் இருந்த குழந்தைக்கு, அப்பொழுது அந்த உணவை ஊட்டினார். பேபி கார்னை குழந்தைக்கு ஊட்டியபோது, ஜாஸ்மின் கண்களுக்கு வித்தியாசமான ஒரு பொருள் உணவில் இருப்பதுதெரிந்தது. பஞ்சு அடைத்த பை போல அது இருந்தது. அதனை உற்று பார்க்கையில், பாப்கானில் இருந்த அந்தப் பொருள், இளைஞர்களால் பயன்படுத்தப்படுகின்ற தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களில் ஒன்றான கூல் லிப் பொருள் என்பது தெரியவந்தன. கூல் லிப் குட்கா உணவில் இருப்பதைப் பார்க்கும் முன்னர், குழந்தைக்கு பேபி கார்ன் உணவை ஜாஸ்மின் ஊட்டி இருக்கின்றார்.

சிறிது நேரத்தில் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வயிறு வலி உபாதையுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்று உணவுகளை அலட்சியமாக டெலிவரி செய்யும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கின்ற ஜாஸ்மின், தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று அலட்சியங்கள் நிகழாத வண்ணம் உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...