டேங்கர் லாரியும் காரும் மோதி விபத்து 5 பேர் பலி - தாராபுரம் அருகே நிகழ்ந்த சோகம்

திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு பழனியில் இருந்து தாராபுரம் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகேடேங்கர் லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம்*_பழனி சாலை மனக்கடவு அருகே கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்திலிருது திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே டேங்கர் லாரியும் காரும் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 4-பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அலங்கியம் போலீசார் முதல் கட்ட விசாரணையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (51) இவரது மனைவி சித்ரா (49) தாராபுரம் உடுமலை சாலையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (78) இவரது மனைவி செல்வராணி (70) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கலாராணி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கலாராணி என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் முதல் கட்ட விசாரணையில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக பழனி சென்று விட்டு தாராபுரம் திரும்பும் பொழுது மனக்கடவு அருகே டேங்கர் லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது காரும் - டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 5-பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அலங்கியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...