சொத்து பிரச்சனை காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

கவுண்டம்பாளையத்தில் உள்ள நிலத்தை அக்காள் மாரத்தாள் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் தனக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அருக்கானி என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: சொத்து பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தனது மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கு பூர்வீக சொத்து திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மாரத்தாள் மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் அருக்கானிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இன்று மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றனர்.



உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...