கோவையில் வங்கி கடன் கட்ட தவறியவரின் வீடு ஜப்தி - மாவட்ட ஆட்சியரிடம் மனு

வீடு ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள், போலீசார், வங்கி வக்கீல் என்று சுமார் 7 க்கும் மேற்பட்டோர் கணேஷ் ஆனந்த் வீட்டிற்க்கு வந்து வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட கணேஷ் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் நிறுத்தப்பட்டனர்.


கோவை: கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (45). இவர் கோவை சின்னவேடம்பட்டி அருகில் மைக்ரோ தொழிற்சாலை வைத்துள்ளார். சிஎன்சி மிசின் வைத்து தொழில் நடத்தி வரும் இவர் கடந்த 2017 ம் ஆண்டு தொழிலை விரிவுபடுத்த அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்பீஎல் வங்கியில் ரூ.1 கோடியே 31 லட்சத்துக்கு வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து 2020 வரை தவணை தவறாமல் மாதம் தோறும் ரூ.1,97,000 கட்டி வந்துள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் தொழில் நலிவடைந்த நிலையில் தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

2021 ம் ஆண்டு வங்கியில் பணம் கட்ட காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும் 2022 ஆண்டு ரூ.10 லட்சம் தவணை தொகையை கட்டி உள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் தவணை கட்டவில்லை என்றால் வங்கியில் உள்ள விதிகளின் படி சர்பாசி ஆக்ட் மூலம் கடன் கட்ட வைத்துள்ள அடமான சொத்து பறிமுதல் செய்யப்படும் என்றும், உடனடியாக ரூ.20 லட்சம் பணம் கட்டினால் மட்டுமே தற்போது அவகாசம் வழங்க முடியும் என்று கூறியுள்ளனர். மேலும் தற்போது வட்டியுடன் ரூ.1 கோடியே 70 லட்சம் கட்ட வேண்டும் என்று கறாராக கூறிவிட்டனர்.

மேலும் வீடு ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள், போலீசார், வங்கி வக்கீல் என்று சுமார் 7 பேர் மேற்பட்டோர் கணேஷ் ஆனந்த் வீட்டிற்க்கு வந்து வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட கணேஷ் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் நிறுத்தப்பட்டனர்.



இது குறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.



இந்த மனு அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமையில் வழங்கப்பட்டது.

இது குறித்து பேசிய ஜேம்ஸ், சர்பாசி என்ற மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்து கடனை தருவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட தலையிட முடியும் என தெரிவித்த அவர் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...