பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி மொபைனல் போனில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக கீர்த்தி குமார் என்பவர் அனுப்பி வைத்து ஏமார்ந்துள்ளார். இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார்.
கோவை: கோவை, உப்பிலிபாளையம் காந்தி புதுாரை சேர்ந்தவர் கீர்த்திகுமார், 35; சாப்ட்வேர் இன்ஜினியர்.சில மாதங்களுக்கு முன், இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு மெசேஜ் வந்தது.
அதிலுள்ள மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது பேசிய நபர், 'பகுதி நேர வேலையாக, ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால், பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம்' என, கூறினார்.
அதை நம்பிய கீர்த்தி குமார், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன் பின், அந்த நபரை, கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.