தி.மு.க. இளைஞரணி மாநாடு - மூலனூர் வந்த வாகன பிரசார பேரணிக்கு அமைச்சர் வரவேற்பு

மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இருசக்கர வாகனப்பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. தற்போது அந்த வாகனம் முலனூர் வந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் வந்தடைந்த திமுக இளைஞரணி மாநாட்டிற்கான வாகன பிரச்சார பேரணியை அமைச்சர் வரவேற்றார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, மாநில உரிமை மீட்புக்கான தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17 -ந் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இருசக்கர வாகனப்பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பெரியார் மண்டலத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் பேரூராட்சி மூலனூர் வருகை தந்த வாகன பேரணியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட தி.மு.க செயலாளராகிய இல.பத்மநாபன் வரவேற்றனர்.



இதில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர , பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...