கோவை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்த 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு அணைகளாக வெளியிடக்கோரி கடந்த 2017 மார்ச் 14ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டம் நாளையும் (மார்ச் 21) தொடர்ந்து நடைபெறும் எனவும், மேலும், வரும் மார்ச் 22ம் தேதியன்று மாநிலம் முழுவதும் உள்ள 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இணைந்து சென்னை, பனகல் மாளிகை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநகரத்தை நோக்கி 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு ஆணைகளாக வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்துள்ளனர்.