இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாராபுரம் காவல்நிலையத்தில் திமுகவினர் புகார்

தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் ஒட்டி உள்ளனர்.


திருப்பூர்: பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் திமுகவினர் புகார் அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ரூ.2 கோடி ஊழல். அமராவதி பாசன வயல் நிலங்களை பணத்துக்காக மனை பிரிவுகளாக வகைப்பாடு மாற்றி கூறு போட துடிக்கும் திமுக நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டை வெள்ளக்காடாக ஆக்கியது பற்றாதா. தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர், அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்.



இதனை பார்த்த திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்து, பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இதில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை தவறாக சித்தரித்து பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த நற்பெயர்களை கெடுக்கும் பட்சத்திலும் மேலும் திமுக ஆட்சியை குறை கூறும் பட்சத்திலும் வேண்டுமென்றே இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் செயல்படுவதாகவும், இதனால் நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்ற தலைவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் ரூ 5 கோடியை இழப்பீட்டுத் தொகையாக திருப்பூர் தெற்கு மாவட்ட தாராபுரம் நகர இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தர வேண்டும் எனவும், உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் 25 கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர். இதனால் திமுகவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்து மக்கள் கட்சி அலுவலகம் மற்றும் கடைவீதி, அண்ணா சிலை போன்ற முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...