தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்பிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கழகத்தை ஆரம்பித்து சிறப்பான முறையில் பணியாற்றி அம்மா (ஜெயலலிதா) உடன் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர் விஜயகாந்த் எனவும், அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மிகவும் வருந்ததக்கது எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


கோவை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலையில் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பிரதமர், தமிழக முதல்வர், திரை துறையினர் உட்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,விஜயகாந்த் மறைந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் துக்கமான செய்தி எனவும், விஜயகாந்த் ஒரு சாமானியராக இருந்து மிகப்பெரிய அளவில் பல படங்களில் நடித்து நடிகர் சங்கத்திற்கும் தலைவராக இருந்து பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கழகத்தை ஆரம்பித்து சிறப்பான முறையில் பணியாற்றி அம்மா (ஜெயலலிதா) உடன் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர் எனவும் கூறினார்.

இந்நிலையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மிகவும் வருந்ததக்கது எனவும், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும், திரை துறையினருக்கும் இரங்கல் தெரிவித்து இறைவன் அவர்களுக்கு தைரியத்தை தர வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...