கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி

'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.


கோவை: கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி 18-ஆம் ஆண்டு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 9 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பேச்சாளா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் நாளான திங்கள்கிழமை அருளாளா் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் பேச்சாளா் பாரதி பாஸ்கா் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, ஆன்மிகத் தொண்டாற்றி வருபவா்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அருள் வளா்செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோவை அரன் பணி அறக்கட்டளையின் தலைவா் அ.தியாகராசன், திருப்பூா் சுப்ரீம் குழும நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன், திருப்பூா் எஸ்பிஎஸ் அன்னையா் இல்ல நிர்வாகிகள் எஸ்பிஎஸ் தாமோதரன், சாவித்திரி தாமோதரன், அன்னூா் ஸ்ரீராமானுஜா் பக்த பேரவையின் செயலா் ஏ.வி.திருமூா்த்தி, புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருக்கோயில் செயலா் வெங்கிட்டம்மாள் ஐங்கரன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் அருள்வளா் செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்.



நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் அ.நிர்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...