உடுமலை அருகே மதுபான கடை அமைக்க எதிர்ப்பு - குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

புதிய மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பொள்ளாச்சி சாலையில் தனியார் இடத்தில் அதிநவீன குளிர்சாதன மதுபான கூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெதம்பட்டியில் நால்ரோடு பகுதி சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது.



மேலும் இப்பகுதியில் பள்ளிகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள், பொள்ளாச்சி தாராபுரம் தேசிய நெடுச்சாலை அமைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அரசு மதுக்கடைகளால் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.



தற்பொழுது மீண்டும் கூடுதலாக அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் மனு வழங்கினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகும். இப்பகுதியில் அரசு மதுபான கடை இருந்தால் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...