கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.

முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) நேற்று காலை 10 மணி அளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.



மேற்படி மக்கள் குறை தீர்ப்பு முகாமினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி பார்வையிட்டு மனுதாரர்களை விசாரித்தார்.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...