கோவை குனியமுத்தூரை அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் (20) மற்றும் அசாருதீன் (20). இவர்கள் இருவரும் கரும்புக்கடை பகுதியில் பாரம் தூக்கும் பணி செய்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு பணி முடிந்து ஆத்துப்பாலம் வழியாக, ஜாபர் தனது வாகனத்தில் அசாருதீனை அழைத்துக் கொண்டு செல்லும்போது, சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது தூக்கியெறியப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், போக்குவரத்து புலனாய்வு துறை (மேற்கு) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு வாலிபர்களின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.